நல்லாட்சியில் நீதிமன்றமும், பொலிஸாரும் சுயாதீனமாக செயற்படுகின்றனர்!

Report Print Kumutha Kumutha in சமூகம்

இலங்கையில் நீதிமன்றமும், பொலிஸாரும் சுயாதீனமாக செயற்படுவதற்கு நல்லாட்சி வழி வகுத்து கொடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி கரவிட்ட தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும், நீதிமன்றமும் சுயாதீனமாக செயற்படுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுதந்திர அரச சேவையாளர்கள் ஒழுங்காக வேலை செய்கின்றார்களா என்பதை மட்டுமே நல்லாட்சி அரசாங்கம் அவதானிக்கிறது. அரச பணியாளர்கள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் கொலை செய்வோம் என ஒருபோதும் மிரட்டவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments