ஒன்று குவிந்த மக்கள்: இலங்கையில் துர்நாற்றம் வீசும் அரியவகை மலர்!

Report Print Murali Murali in சமூகம்

பொலன்னறுவை மாவட்ட கிராமம் ஒன்றில் அரியவகை மலர் ஒன்று பூத்துள்ளது.

குறித்த மலரினை பார்வையிடுவதற்கு ஏராளமான பொது மக்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மலர் நறுமணம் வீசுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அதிகளவான ஈக்கள் குறித்த மலரில் மொய்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த மலரில் உள்ள கிழங்கு வகை உள்நாட்டு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments