கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் திமிங்கிலம் மீட்பு!!

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு – புதிய காத்தான்குடி கடற்கரையில் இன்று காலையில் இறந்த நிலையில் கரையொதுங்கி கிடந்த சுமார் 5 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று மீனவர்களால் மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த திமிங்கலம் ஆழ் கடலில் விபத்துக்களில் சிக்கி இறந்து விட்ட நிலையில் கரையொதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் ஊகடவியலாளர்களிடம் கூறியுள்ளனர்.

சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட இந்த திமிங்கிலத்தை காத்தான்குடி நகரசபையினர் அப்புறப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர்.

இதேவேளை, கப்பல்கள், விசைப்படகுகள் மற்றும் கற்பாறைகளில் அடிபட்டு பெரிய மீன்கள் அவ்வப்போது இறந்து கரையொதுங்குவதுண்டு எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments