மடுக்கோயில் வீதி புனரமைக்கப்படுமா?

Report Print N.Jeyakanthan in சமூகம்

வவுனியாவில் இருந்து பிரமனாயன்குளம் ஊடாக மடு கோயில் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது.

வவுனியாவில் இருந்து பிரமனாயன்குளம் வரை சாதாரண தார் இடப்பட்ட வீதியாக உள்ள போதிலும் பிரமனாயன்குளத்தில் இருந்து மடுக்கோயில் கோயில் வரை செம்மண் வீதியாகவே உள்ளது.

இந்த வீதியால் பயணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் மடுக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புழுதியால்நோய் தொற்றுகளுக்கு உள்ளாவதாகவும் இதனால் வீதியை புனரமைக்க சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments