கல்வி அமைச்சில் சட்டவிரோதமாக உள்நுழைந்துள்ள அரச வைத்தியர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளை பிரதான பாடசாலைகளில் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முன்வைத்து சில வைத்தியர்கள் நேற்று இரவு முதல் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் உள்நுழைந்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய, செயலாளர் நவிந்த சொய்சா உள்ளிட்டவர்கள் கல்வி அமைச்சில் தற்போது இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கவனம் எடுக்குமாறு கல்வி அமைச்சினால் கடுவெல நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்வி அமைச்சில் தங்கியுள்ள அனைத்து வைத்தியர்களும் உடனடியாக அங்கிருந்து அகலுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.