ஏறாவூர் இரட்டைக் கொலை: நெருங்கிய உறவினர் கைது

Report Print Kanna in சமூகம்
332Shares

மட்டு - ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது பலகை ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments