யாழில் ஷெல் வெடித்து நபரொருவர் படுகாயம்

Report Print Sumi in சமூகம்
118Shares

வெடிக்காத நிலையில் இருந்த ஷெல்லினை வெட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் 3ஆம் குறுக்கு பகுதியைச்சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது 37) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர், பழைய ஷெல்கள் எடுத்து அவற்றில் இருக்கும் மருந்தினை மீன்பிடிப்பதற்கு விற்பனை செய்கிறவர் என்றும் இன்று பழைய ஷெல்களை உடைக்கும் போது அதிலொன்று வெடித்துச் சிதறியுள்ளது.

சிதறியபோது படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெடிப்புச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Comments