ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் இன்று இடம் பெற்று வருகின்றது.
இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் உறவினர்களே இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு வருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.