நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஒயா உடரதல்ல தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் காணப்படும் மின் கம்பங்கள் அனைத்தும் உக்கிப்போன நிலையில் காணப்படுவதுடன், மின் கம்பங்கள் உடைந்து கீழே விழ கூடிய அபாயத்தில் உள்ளதாக இத்தோட்டத்தில் வாழும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மின்சார கம்பங்களை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அச்சத்தின் மத்தியில் வாழ்வதோடு தாம் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இந்த மின்கம்பங்கள் கீழே விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
எனவே உக்கியுள்ள இந்த மின்கம்பங்களை உடனடியாக திருத்தி அமைத்து தர வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.