கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கான நிதி 5 மில்லியனாக குறைப்பு

Report Print Victor in சமூகம்
77Shares

கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 மில்லியன் ரூபாய் இம்முறை 5 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று தெரிவித்தார்.

அமைச்சருக்கு வழங்கப்படும் 5 மில்லியனுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பான கடிதங்கள் கிராமிய அமைப்புக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்காகவும் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

திருகோணமலை கல்வி அமைச்சு கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேற்படி நிதிக்குறைப்பு பற்றித் தெரிவித்தார்.

கடந்த வருடம் இந்நிதி 10 மில்லியன் ரூபாயாக வழங்கப்பட்டு, மக்களால் முன்வைக்கப்பட்ட சிறிய பொதுப்பணிகளுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

இம்முறை நிதித் தட்டுப்பாடு காரணமாக, அது 5 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதனைப்பயன்படுத்தி மக்களால் முன்வைக்கப்பட்ட சிறிய திட்டங்களுக்கு இன்று வழங்கப்படுகின்றன.

ஆனாலும் இந்நிதியை வழங்குமாறு, கிழக்கு மாகாண அமைச்சர்களாகிய நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தற்போது வழங்கப்பட்ட இந்நிதியை நீங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதனை விட, மாகாண உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

Comments