வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குழு

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்
170Shares

லங்கா புத்ர வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து, வங்கியின் 2/3 பெரும்பான்மையுடன் தேசிய சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கத்தின் தாய் கிளை உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

வங்கிக்குள் புகுந்த அவர்கள் தேசிய சேவையாளர் சங்கத்தில் இருந்து விலகி இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தில் இணையுமாறும், இல்லையேல் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இதேவேவளை லங்கா புத்ர வங்கியின் உள்விவகாரங்கள் காரணமாக சந்திரிகா உடுகலகே என்ற உத்தியோகத்தர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவே இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments