கூறிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கப்பட்டு இளைஞர் கொலை!

Report Print Kumar in சமூகம்
311Shares

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப்பகுதியில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

மாமாங்கம் பகுதியை சேர்ந்த விஜித் சோமசிறி என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments