குப்பைத்தொட்டிகளாக மாறும் யாழ் குடாநாடு

Report Print Vino in சமூகம்
338Shares

யாழ்.குடாநாட்டில் நகர்களை அண்டி காணப்படும் குளக்கரைகள் குப்பைத்தொட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதை அண்மைக் காலங்களாக காணக்கூடியதாக உள்ளது.

யாழ் மத்தியுஸ் வீதியில் அமைந்துள்ள குளத்தில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதினால் பெரும் அசெளகரியங்களை மக்கள் எதிர்நோக்குகின்றனர். இதேவேளையில் அருகிலுள்ள கிணறுகள் ,தேவாலயம், பாடசாலைகள் என்பன இதன் காரணமாக மாசடைவதையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது.

தற்போது இப்பகுதிகளில் அதிகளவில் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால் காகங்கள் மற்றும் விலங்குகள் ஒன்று கூடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு கவனிப்பாரற்று இந்த குளக்கரை இருப்பதனால் வீதிகளுக்கும் குப்பைகள் பரவி நீரில் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதியால் செல்லும் வேளையில் துர்நாற்றம் வீசுகின்றது.

எனினும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments