தமிழ் சமூகத்தின் மீள் உயிர்பிற்கு UN HABITAT ஆற்றிய பணிகள் வரலாற்றில் நிலைத்து நிற்கும்: சிறீதரன் எம்.பி புகழாரம்

Report Print Arivakam in சமூகம்
71Shares

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஜப்பான் மக்களின் நிதிப்பங்களிப்புடன் UN HABITAT நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட சுமார் முன்று மில்லியன் செலவில் அமைந்த முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்,

போருக்கு பின்னரான காலங்களில் தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்.

எங்களுடைய வீடுகள் பட்டணங்கள், நகரங்கள், பள்ளிக்கூடங்கள், வாழ்வாதார வளங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு நிர்க்கதியானவர்களாக மீள்குடியேற்றப்பட்டோம்.

அடுத்த வழி என்னவென்று தெரியாது இருந்த போது சர்வதேச சமூகத்தின் உதவிகள் ஓரளவுக்கு ஆறுதலை தந்திருந்தது.

விசேடமாக இந்திய அரசினாலும் வேறு நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட எமது மக்களுக்கான வீடுகளை UN HABITAT நிறுவனம் நெகிழ்ச்சியோடும் தொழிநுட்ப உதவிகளோடும் வழங்குவதற்கு காட்டிய அர்ப்பணிப்புகளை நாம் அறிவோம்.

மக்கள் விருப்பங்களை அறிந்து அவர்கள் சேவையாற்றிய விதம் போருக்கு பின்னர் அழிவடைந்த பிரதேசங்களில் காருண்ய சேவையாக அமைந்தது.

300 மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளான பலநோக்கு மண்டபங்கள், முன்பள்ளிகள், பாலங்கள், உள்ளூர் வீதிகள் வெள்ளத்தடுப்பு அணைகள் என்பவற்றை பல ஆயிரம் மில்லியன் ருபா செலவில் எமது மாவட்டத்தில் அமைத்து அரும்பணியாற்றி இருக்கிறார்கள்.

ஆயினும் இன்னும் நிறைவு செய்யப்படாத ஏராளமான தேவைகள் போரின் பாதிப்புக்கு காரணமாக இருந்து வருகின்றது.

இந் நிலையில்UN HABITAT தமது பணி முடிந்து கிளிநொச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருப்பது ஆறுதல் அளிப்பதாக இல்லை.

அவர்கள் இங்கிருந்து இன்னும் சில வருடங்களுக்கு போரின் பாதிப்புக்களுக்கு உதவ வேண்டும் எமது மக்களுடையதும் பொது அமைப்புக்களுடையதும் விருப்பமாக இருக்கிறது.

இருப்பினும் அவர்கள் இது வரை ஆற்றிய காலப்பணிக்கு எங்கள் தமிழர் தேசத்தின் நன்றிகள் என்றார்.

இந்த நிகழ்வில் UN HABITAT நிறுவனத்தின் மாவட்ட பொறியியளார் யுகனீதன், உதவிதிட்டமிடல் பணிப்பளார் அமல்ராஜ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேஸ், திருவையாறு பாடசாலை அதிபர் சிறீதரன், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் என பல கலந்து கொண்டனர்.

Comments