வெலிமடை தம்பவின்ன பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற திடீர் தீயினால் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ஒரு தொகை மின் கம்பங்கள் தீக்கிரையாகியுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 6.5 இலட்சம் ரூபா பெறுமதியான மின் கம்பங்களே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரதேசத்தில் இடம்பெற்ற மத அனுஷ்டானம் ஒன்றில் வீதி உலா வருகையின் போது பக்தர்களால் கொண்டு செல்லப்பட்ட தீப்பந்தத்தின் விளைவின் காரணமாகவே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.