இந்தியாவிற்கு யாத்திரை சென்று வந்த இருவர் உயிரிழப்பு!

Report Print Kumutha Kumutha in சமூகம்
283Shares

இந்தியாவுக்கு யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பிய இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு பேருக்கும் இன்ஃபுளுவென்சா H1N1 நோய் காணரமாக உயிரிழந்துள்ளார்களா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாபம் - நல்லதரன்கட்டு பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 27ம் திகதி இந்தியாவுக்கான யாத்திரையை மேற்கொண்ட நிலையில் மீண்டும் கடந்த 10ம் திகதி நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் ஒருவர் கடந்த 12ம் திகதியும், மற்றுமொருவர் நேற்று முன்தினமும் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் வைத்திய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்களுடன் இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த மற்றுமொரு பெண் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments