வேலணை வித்தியாலய காணியிலுள்ள விகாரையை அகற்றக் கோரிக்கை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
165Shares

வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய காணியில் அமைந்துள்ள விகாரையினை வேறிடத்திற்கு மாற்றுமாறு பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தீவக வலயத்திலேயே சிறப்பாக இயங்கிவரும் இப்பாடசாலையின் காணியின் ஒரு பகுதியில் கடற்படையினரால் விகாரை அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பாடசாலையினை அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாதிருப்பதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பெற்றோர் பாடசாலைக் காணியிலிருந்து விகாரையினை வேறிடத்திற்கு மாற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தித் தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2009ம் ஆண்டில் சிறிய புத்தர்சிலையினை காணியின் ஒருபகுதியில் நிறுவிய கடற்படையினர் 2012ஆம் ஆண்டில் விகாரையினை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments