மரணதண்டனைக் கைதி தெமட்டகொட சமிந்த வீட்டில் ஜோன் சினா

Report Print Kumutha Kumutha in சமூகம்
1913Shares

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் வீட்டிலிருந்து பல குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

"ஜோன் சினா" என்ற 35 வயதான நபரே இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் சமிந்த சிறைக்கு சென்றதன் பின்னர் கடவத்த பகுதிக்கு வந்துள்ள அவர், சமிந்தவின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, களனி பொலிஸ் பிரிவின் ஒத்துழைப்புடன் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments