சட்டவிரோத கச்சேரியை நடாத்திச் சென்றவர் கைது

Report Print Kumutha Kumutha in சமூகம்

மாத்தறை-கொப்பராவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக கச்சேரி ஒன்றை நடாத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடம் இருந்து போலி இறப்பர் முத்திரைகள், அரச முத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபரை நாளைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments