கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகளின் அவலம் : வாக்குறுதி வழங்கும் அரசியல் தரப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் கடந்த 16/9/2016 இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் அனைத்து உடைமைகளையும் இழந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமது இழப்பினை எவ்வாறு ஈடுசெய்வது வாழ்வாதாரத்தினை எவ்வாறு கொண்டுசெல்வது என தெரியாமல் தவித்து நிற்கின்ற நிலைமையில், அரசியல் தரப்புக்கள் ஆறுதல் வார்த்தைகளையும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக தீர்க்கமான பல முடிவுகளை எடுப்பதாகவும் வாக்குறுதிகளை வழங்கி உள்ளனர்.

இருப்பினும் அவர்களுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கரைச்சி பிரதேச சபையினர் செய்துவருகின்றனர்.

அத்துடன் அவர்களுக்கு உந்து சக்தியாக சந்தை வணிகர்கள் மற்றும் கிளிநொச்சி வணிகர்கள் அவர்களுக்கான உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.

இன்றைய தினமும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சனாதன் அவர்களின் முயற்சியில் கரைச்சி பிரதேச சபையின் நிதி உதவியிலும் கிளிநொச்சி வர்த்தகர்களது.

ஆதரவுடனும் இருபத்து இரண்டு தற்காலிக கடைத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த கடைகள் பழக்கடை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு நாளைய தினம் மீளவும் பழக்கடை தொகுதியாக இயங்கவுள்ளது.

கிளிநொச்சியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது இராணுவத்தினர் ,பொலிஸார் ,கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் , வணிகர்கள் ,மக்கள் என பலரும் குறுகிய நேரத்திற்குள் வருகை தந்து உதவிகளை செய்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினை பொறுத்தவரையில் தீயணைப்பு வாகனம் இல்லை என்ற குறையை தவிர மிகுதி அனைத்தையும் ஒரு அரச உத்தியோகத்தர் என்பதற்கு அப்பால் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கச்சிதமாக செய்துள்ளார்.

இதேவேளை, அவருடன் சில பிரதேச சபையின் பணியாளர்களும் இரவுபகலாக சேவையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments