தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் ஒரு மாதத்துக்குள் கைச்சாத்திடப்படும்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்னும் ஒரு மாதத்துக்குள் கைச்சாத்திடப்படும்.

இதில் எந்த அளவு தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது, காரணம் ஏனைய துறைகள் போலன்று வரிகள் மூலமாக சம்பளத்தை கூட்டிக் கொடுக்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஹற்றன் சீடா மையத்தில் அமைந்துள்ள மலையக கல்வி தகவல் மையத்தின் பொறுப்பாளராக மிக நீண்ட காலமாக கடமையாற்றிய எம்.ஆர்.விஜயானந்தன் அரச பணியில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “நட்புநலன் ஓம்பல் மகிழ்வுபசாரம்” நிகழ்வு அண்மையில் ஹற்றன் மலையக கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது உற்பத்தினை அடிப்படையாகக் கொண்டே சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று தேயிலையின் விலை உலக சந்தையில் குறைந்துள்ளதுடன் பல நாடுகள் தேயிலை உற்பத்தியில் முன்நிலையில் உள்ளன.

எனவே தான் குறிப்பிட்ட நேரத்தில் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது இம்முறை பேச்சு வார்த்தையில்

தோட்டத்தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் பெற்றுக்கொடுக்கபடுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு கடந்த காலங்களில் இ.தொ.கா நிலுவை சம்பளத்துடனேயே சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துள்ளது.

ஆனால் இம்முறை இடைக்கால கொடுப்பனவு பெற்றுக்கொடுத்தன் காரணமாக அமைச்சரவை ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் காரணமாகவும் இன்று நிலுவை சம்பளம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31ம் திகதி காலாவதியாகியது.

இந்நிலையில் சுமார் ஒருவருடமும் 6 மாதமும் கழிந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.

சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கும் வரை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 2500 கொடுப்பனவும் இரண்டு மாதம் மாத்திரம் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொருளாதார சுமை குறைக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியதுடன்தோட்டத்தொழிலாளர்களும் தமது நியாயமான சம்பளத்தினை பெற்றுத்தருமாறு போராட்டம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நாளை - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறது இ.தொ.கா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டநாள் ஏக்கமாகவுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தையும், சம்பளத்தையும் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பிலான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தொடர்பில் இதுவரை ஒன்பதுகட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. நாளை இடம்பெறவுள்ள 10ஆவதும் இறுதியுமான பேச்சில் கட்டாயம் முதலாளிமார் சம்மேளனத்துக்கும், தொழிற்சங்கங்களுக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்படும் என பரவலாகப் பேசப்படும் நிலையில், இது தொடர்பில் இ.தொ.காவின் தலைவர் முத்து சிவலிங்கத்திடம் வினவியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

இதுவரை இடம்பெற்றுள்ள பேச்சுகள் அனைத்தும் இணக்கப்பாடு எட்டப்படாமலேயே முடிந்தன. இ.தொ.கா. தமது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தக்கூடிய சம்பளம் இன்றைய சூழலில் கட்டாயம் தேவை. நாளை நடைபெறவுள்ள இறுதிகட்ட பேச்சில் கட்டாயம் தீர்வு எட்டப்படும்.

தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் இ.தொ.கா. ஒருபோதும் பின்நிற்காது. நாளைய பேச்சில் இணக்கப்பாடு எட்டப்படும் என்பதுடன், கூட்டு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் சூழலும் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments