யாழில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியாவின் புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இரவு 07.30 மணியளவில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் இன்றைய தினம் யாழ். நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் வருகை தந்த விசைப்படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களை யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையின் உதவிப் பணிப்பாளர் எஸ். ரமேஸ்கண்ணா கூறியுள்ளார்.

Latest Offers

loading...

Comments