மீரியபெத்த மண்சரிவில் சிக்குண்டு சிதையுண்ட சகோதரிகளின் அவல நிலை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த முகாமில் சுமார் 23 மாதங்களை கடத்தியுள்ள தமக்கு புதிய வீடமைப்புத்திட்டத்திற்கமைய நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகள் இருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில் இன்று (20) எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள் மண்சரிவில் சிக்குண்டு தமது உறவுகளையும் பரிகொடுத்து, தமது உடமைகளையும் இழந்த நிலையிலேயே முகாமில் தங்கியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்கையில் நேற்று (19) பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை கையளிப்பது தொடர்பில் நடந்த கலந்துரையாடலின் போது, குறித்த சகோதரிகள் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே வீடு கிடைக்கப்போவதாக பிரதேச செயலகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சகோதரிகள் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தாம் இவ்விடத்தை விட்டு கழைந்து போவதில்லை என போராட்டத்தை ஆரம்பித்துள்ள சகோதரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments