நீதிமன்றத்திற்கு வெளியில் நபர் ஒருவர் மீது தாக்குதல்!

Report Print Ramya in சமூகம்

மொரட்டுவை நீதவான் நீதிமன்றிற்கு வெளியில் இனந்தெரியாத குழுவினரால் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழுவினர் முச்சக்கர வண்டியினூடாக வருகை தந்தே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுக்கு உள்ளான நபரின் விரல் துண்டாகியுள்ளதாகவும், அவரது கால்கள் மற்றும் கழுத்து பகுதிகளில் அதிக காயத்திற்கு உள்ளாகியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர், போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கிற்கு தனது தாயுடன் நீதிமன்றம் சென்று வந்த போதே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...

Comments