கிளிநொச்சி சந்தைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஏன் வரவில்லை? சீலரத்தின தேரர் கேள்வி

Report Print Suman Suman in சமூகம்

எதிர்க்கட்சித்தலைவர் ஏன் கிளிநொச்சி சந்தைக்கு வரவில்லை என பத்ரமுல்ல சீலரத்தின தேரர் கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இன்று சந்தித்து உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான், இனவாதம்பேசவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன்.

உங்களுக்கு உதவி செய்யுமாறு பேசுவேன். நாம் அனைவரும் ஒரு நாட்டை சேர்ந்தவர்கள், இனவாதம் பேசவேண்டிய தேவை எமக்கு கிடையாது.

ஆனால், உங்களது வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக்கப்பட்டவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும்.

டக்ளஸ் தேவானந்தா, உங்கள் வாக்குகளால் நாடாளுன்றம் சென்றவர். அவர் உங்களை இன்று வரை சந்திக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர், தமக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி வழங்கப்படவில்லை என்று இனவாதம் பேசினார். இன்று பதவி கிடைத்தவுடன் அமைதியாக இருக்கின்றார்.

அவரும் இன்று வரை உங்களை வந்து சந்திக்கவில்லை என்றார். இன்று அரசியலில் உள்ளவர்களின் உறவினர்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களா?

யாருடைய உறவினராவது யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்களா? அக்காலத்தில் அரசியல்வாதிகள், சுகபோக வாழ்க்கையை அனுபவித்தார்கள்.

இன்று யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த நீங்கள் இன்று மீண்டும் இழப்பினை சந்தித்துள்ளீர்கள் என குறிப்பிட்டார்.

Latest Offers

loading...

Comments