ஹெரோயின் பயன்பாட்டால் இலங்கையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா..?

Report Print Murali Murali in சமூகம்

ஹெரோயின் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட 17457 பேர் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். ஆளும் கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு நாடு முழுவதிலும் மேற்கொண்ட ஆய்வில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை காரணமாக பாதிக்கப்பட்டோர் 17457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஹெரோயின் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க சிறப்பு சுகாதார திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த புள்ளி விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இந்த தொகை மேலும் அதிகமாக இருக்க கூடுமென்று தெரிவித்தார்.

இக்கருத்துக்களை நிராகரித்த அமைச்சர் சேனாரத்ன உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...

Comments