கழிவறைக்கு செல்வதாக கூறி தப்பிச் சென்ற கைதி

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து பன்வில நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறையதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த இந்த நபர் பன்வில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இன்று அழைத்து வரப்பட்டார்.

அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி, கைதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை, கஹல்ல வீதியை சேர்ந்த முங்குலியா என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படும் நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய கைதியை கைது செய்ய சிறையதிகாரிகளும் பன்வில பொலிஸாரும் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

Comments