எக்னெலிகொட காணாமல் போனமைக்கான சாட்சியங்கள் இல்லை

Report Print Steephen Steephen in சமூகம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போக செய்யப்பட்டார் என்பதற்கான எவ்வித சாட்சியங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

துறவிகள் குரல் அமைப்பு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எக்னெலிகொட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் இருக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு சீ.ஐ.டி பொலிஸார் அழுத்தம் கொடுக்கின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச இந்த சம்பவத்திற்கு காரணம் எனக் கூறுமாறும் அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். படையினர் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டதன் காரணமாகவே ரணிலும் சிறிசேனவும் தற்போது வடக்கிற்கு செல்ல முடிகின்றது.

தற்போது பயங்கரவாதிகளுக்கு பதிலாக படையினர் சிறைக்கு செல்கின்றனர். படையினருக்கு பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு செலுத்த நேரிட்டுள்ளது.

இந்த படையினருக்காக வீதியில் இறங்கி உண்டியல் குலுக்குவது குறித்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா போன்றோர் போக்கிரி கதைகளை கூறுகின்றனர்.

எந்த மாட்டுக்கும் யுத்தம் செய்ய முடியும் என்று கூறிய லக்ஷ்மன் கிரியெல்லவுடன் பொன்சேகா இணைந்துள்ளார்.

பொன்சேகாவையும் சேர்த்தே கிரியெல்ல மாடு என்று கூறினார் எனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments