ஹசீஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தமுயன்ற ஈரானியர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயன்ற ஈரானியர் ஒருவர் நேபாளத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாள விமான நிலையத்தில் மும்பாய்க்கு செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது அவரின் பயணப்பொதியில் இருந்து 1.7கிலோகிராம் ஹசீஸ் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது.

விசாரணைகளின் போது தாம் இலங்கைக்கு செல்லவுள்ளதாக குறித்த ஈரானியர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் நிலையில் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவே ஹசீஸ் போதைப்பொருளை நேபாளத்தில் வந்து கொள்வனவு செய்ததாக குறித்த ஈரானியர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments