பொருத்தமான தீர்வை வழங்கத்தவறின் மக்கள் புரட்சி வெடிக்கும், திலீபன் நினைவு நிகழ்வில் சிறீதரன் எம்.பி

Report Print Arivakam in சமூகம்

இலங்கை, இந்திய அரசுகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987ம் ஆண்டு உண்ண நோன்பு இருந்து உயிர் நீத்த லெப் கேணல் திலீபனின் 29 வது ஆண்டு நிகழ்வு கடந்த ஏழு வருடங்களின் பின்பு கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஆட்சி மாற்றம் இடம் பெற்ற பின்பு அகிம்சை வழியிலான போராளிகளை நினைவு கூருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் நேற்று கிளிநொச்சி அறிவகத்தில் மிக எழுச்சி பூர்வமாக நிகழ்வில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிறப்புரை ஆற்றினார்.

எங்களுடைய நீண்ட போராட்ட வரலாற்றிலே எமது தலைமைகள் பலவிட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அரசுடனான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றி இருக்கிறார்கள்.

அகிம்சை ரீதியிலான எமது முயற்சிகள் சவாலுக்கு உட்பட்டபோதே ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

ஆயுதத்தை எமது இனம் கையாண்ட முறைகளுக்கு மேலாக ஜனநாயக ரீதியில் எமது முயற்சிகள் இருந்தது.

எமது அறவழிப் போராட்டங்கள் மாத்திரம் அன்றி தியாகி திலீபன் அன்னை பூபதி போன்றோரின் இத்தகைய தியாகங்களும் நாங்கள் ஜனநாயகம் மீது கொண்டு இருந்த விருப்பத்தின் வெளிப்பாடுகளே இன்றும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எமது தலைமை முடிந்தளவு விட்டுக்கொடுப்புக்களுடன் தீர்வு நோக்கி பயணிக்கின்றது.

இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும் நியாயமான தீர்வை பொருத்தமான இக்கால கட்டத்தில் முன்வைக்க வேண்டும்.

அதன் ஊடாக இலங்கையில் நீடித்த சமாதானம் நிலைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த தவறினால் தியாகி திலீபன் அவர்களது கனவாகிய மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும்.

ஆகவே நடைமுறை சூழலை தகுந்த முறையில் பயன்படுத்த அரசுமுன்வர வேண்டும் என்றார்.


Latest Offers

loading...

Comments