பெண் சட்டத்தரணி ஒருவரின் செயலால் குழந்தைகளை விட்டு இங்கிலாந்து சென்ற பெண்

Report Print Kumutha Kumutha in சமூகம்

பெண் வர்த்தகர் ஒருவர் தனது குழந்தைகள் இருவரையும் இங்கிலாந்துக்கு சட்டபூர்வமாக அழைத்துச் செல்வதன் பொருட்டு பெண் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக குறித்த பெண் சட்டத்தரணிக்கு 80,000ரூபா பணத்தினையும் வழங்கியுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவினை பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு தனது குழந்தைகளுடன் வருகைத் தந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

காரணம் குறித்த பெண் சட்டத்தரணி இந்த குழந்தைகளை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான எந்த விடயத்தையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தெரிந்துக்கொள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த பெண் சட்டத்தரணியிடம் பாதிக்கப்பட்ட பெண் சென்ற போது, அவர் அவசர அவசரமாக தனது வாகனத்தில் ஏறியுள்ளதுடன்,பொறுப்பில்லாத முறையில் வர்த்தகப் பெண்ணிடம் நடந்துக்கொண்டுள்ளார்.

இந்த சட்டத்தரணியின் செயற்பாடை அவதானித்துக் கொண்டிருந்த ஏனைய சட்டத்தரணிகள் வாயடைத்துப் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் மோசடியில் ஈடுபட்ட பெண் சட்டத்தரணி பொலிஸ் நிலையம் சென்று குறித்த வர்த்தகப் பெண் தன்னை மிரட்டியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், இறுதியில் அந்தப் பெண் தனது குழுந்தைகள் இல்லாமலேயே இங்கிலாந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments