கடற்கரையில் உறங்கிய முதலாளிக்கு நேர்ந்த அவலம்

Report Print Reeron Reeron in சமூகம்

கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த முதலாளியான சீனிமுஹம்மது முஹம்மது பாறூக் (வயது 60) என்பவரின் சடலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி 6ஆம் குறிச்சியை அண்டிய கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் சடலம் காணப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தனது முதலாளியும் தானும் பட்டா ரக வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கல்முனைப் பிரதேசத்துக்குச் செல்லும் வழியில் காத்தான்குடிக் கடற்கரையில் வழமையாக உறங்கி விட்டுச் செல்வதாக குறித்த வாகனச் சாரதி தெரிவித்தார்.

அவ்வாறே ஞாயிற்றுக்கிழமையும் (25) யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தாம், காத்தான்குடிப் பிரதேசத்தை அடைந்தபோது கடற்கரையில் உறங்கியதாகவும் இன்றைய தினம் அதிகாலை தனது முதலாளியை எழுப்பியபோது அவர் அசைவற்று காணப்பட்டார் எனவும் சாரதி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

தனது முதலாளி இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதுடன், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக குறித்த முதலாளியுடன் தான் பணி புரிவதாகவும் பொலிஸாரிடம் சாரதி கூறினார்.

Latest Offers

loading...

Comments