இராணுவத்தை சேர்ந்த மேலும் 5 பேர் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

லெப்டினட் கேர்ணல் யசஸ் வீரதுங்க உட்பட 5 இராணுவ அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு நடந்த இரண்டு பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் நபர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் இவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments