மைத்திரியின் கதிரையை பறித்த கயந்த! நியூயோர்க்கில் நடந்த கோளாறு

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுடன் உணவு விருந்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டலிற்கு அருகில் இருந்த உணவகம் ஒன்றிலேயே இந்த உணவு விருந்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு நடுவில் தனியான ஆசனம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ஊடகவியலாளர்களுக்கு இரண்டு பக்கங்களில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

“நான் ஊடகவியலாளர்களுடன் இருக்கும் போது எதற்கு நெறிமுறைகள்? நான் இங்கு பெரியவர் போன்று இருப்பதற்கு அவசியமில்லை. கயந்த நீங்கள் எனக்காக ஒதுக்கிய இடத்தில் அமருங்கள் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிற்கு ஆசனத்தை வழங்கிவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் உள்ள ஆசனத்தில் ஜனாதிபதி மைத்திரி அமர்ந்துள்ளார்.

அங்கு ஜனாதிபதி ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஊடகவியலாளர்களுடன் உரையாடி கொண்டு தனது உணவை பெற்றுக் கொண்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments