தாஜுதீன் உடற்பாகங்கள் காணாமல் போனமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு

Report Print Kumutha Kumutha in சமூகம்

றக்பி வீரர் வசீம் தாஜூதீன் சடலத்தின் சில பாகங்களை மாலபே – தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவர் மற்றும் அந்த கல்லூரியின் உபவேந்தர் எடுத்து சென்றுள்ளதாக அண்மையில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி 'மருத்துவ பீட மாணவர்கள் நடவடிக்கை குழு' இன்று குற்றப் புலனாய்வு துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.

வசீம் தாஜூதீன் சடலத்தின் பாகங்களை மாலேபே – சைட்டம் நிறுவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இது தொடர்பாக பலரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் பெற்று கொடுத்த வாக்குமூலங்களுக்கு அமைவாக இது குறித்து தெரியவந்ததாகவும், குற்றப் புலனாய்வு திணைக்களம் அன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments