வெள்ளவத்தையில் பொலிஸார் அதிரடி சோதனை! பெண்கள் இருவர் கைது

Report Print Manju in சமூகம்

வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரட்டுவ மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பெண் விபச்சார விடுதியை நடாத்திய குற்றத்திற்காகவும் மற்றைய நபர் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

43 மற்றும் 41 வயதையுடைய இச்சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணையை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers

Comments