வீதியில் நடந்து சென்றவர்களை மோதிய கெப் வாகனம்! இருவர் பலி

Report Print Manju in சமூகம்

அநுராதபுர மாவட்டம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த கெப் ரக வாகனம், வீதியில் நடந்து சென்ற பெண்கள் இருவர் மற்றும் குழந்தையுடன் மோதியுள்ளது.

இதில் 49 வயதான தாய், அவரது மகளான 24 வயது பெண் ஆகியோரே பலியாகியுள்ளனர்.

சடலங்கள், தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers

Comments