தில்ருக்ஷி டயஸிற்கு எதிராக முறைப்பாடு

Report Print Manju in சமூகம்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

வரி சலுகையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் கொண்டு வருதல் மற்றும் அதனை வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதன் ஊடாக அரசாங்கத்தின் வரி பணம் மோசடி செய்யப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பணிப்பாளர் நாயகம் தவறியுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தில்ருக்ஷி டயஸிற்கு எதிராக சட்டத்தரணி ஒருவரால் ஆணைக்குழுவின் தலைவரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பணிப்பாளர் நாயகம் மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் முறைப்பாட்டினை மேற்கொண்ட சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முறைப்பாட்டை விசாரணை செய்து நிறைவு செய்யும் வரையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் தனது பதிவியின் நடவடிக்கையை மேற்கொள்ளவதனை தடுக்குமாறு ஆணைக்குவின் தலைவரிடம் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers

Comments