மட்டக்குளி துப்பாக்கி சூட்டு சம்பவம் - பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 11 பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
139Shares

மட்டக்குளி - சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று இரவு இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 11 பேரும் ஆயுதம் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஹெரோயின் வர்த்தகத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ள அதேவேளை, 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments