இலங்கை, இந்திய பெண்கள் ஓமானில் விற்பனை

Report Print Ajith Ajith in சமூகம்
372Shares

இலங்கை உட்பட்ட பல நாடுகளின் பெண்களை ஓமானில் 1500 ரியால்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைம்ஸ் ஒப் ஓமான் என்ற செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.

பொதுவாக ஓமானை பொறுத்தவரையில் வீட்டுப்பணிப்பெண்களை நாட்டுக்குள் அழைத்து வருவதற்கு உரிய சட்டமுறைகள் உள்ளன.

எனினும் அதனை மீறி ஒமானில் பெண்கள் சட்டவிரோதமாக வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு மாதாந்த சம்பளமாக 80 ரியால்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன.

அனுபவம் வாய்ந்தவர்களுக்கு 100 முதல் 120 ரியால்கள் வழங்கப்படுகின்றன என்றும் ஓமானிய டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Comments