பாடசாலை வளவுக்குள் நுழைந்த பாரிய முதலை

Report Print Karan in சமூகம்
166Shares

வவுனியா - உக்குளாங்குளத்தில் நேற்று இரவு பாரிய முதலையொன்றை இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளார்கள்.

வறட்சி காரணமாக குளத்தில் நீர் நிலைகள் வற்றிப் போயுள்ளதால், ஈரூடகவாழிகள் ( நிலநீர் வாழிகள்) மக்கள் வாழ்விடங்களை நோக்கி படையெடுக்கின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் உக்குளாங்குளம் கனரா பாடசாலைக்கு அருகே வந்த பாரிய முதலையொன்று வந்துள்ளது.

முதலையை கண்டு நாய்கள் குரைத்தமையினால் அயல் வீட்டாரின் உதவியுடனும் உக்குளாங்குளம் இளைஞர்களின் உதவியுடனும் முதலையை பிடித்து கட்டி வைத்துள்ளார்கள்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments