கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Report Print Agilan in சமூகம்
55Shares

கூட்டு ஒப்பந்தம் மலையக மக்களின் உரிமைகளை மீறியுள்ளது என்ற நோக்கில் மனித உரிமை மீறல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

மலையக தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தி சிவில் மலையக குழுவானது மனித உரிமைகள் ஆணையகத்தில் இந்த விசேட கலந்துரையாடலை ஒழுங்கமைத்திருந்தது.

மேலும், மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் கம்பனிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு மலைய மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அருட்தந்தை சக்திவேல் தொழிலாளர் சங்கத்தில் இந்த விடயம் தொடர்பில் முறைபாடு ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மலையக தமிழர்களை தேசிய இனமாக வரவிடாது இனவாதிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளே இவை. மற்றும் தொழிற்சங்கங்கள் மலையக மக்களுக்கு, கம்பனிகளுடன் இணைந்து கொண்டு துரோகமிழைப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments