மட்டக்களப்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது

Report Print Reeron Reeron in சமூகம்
597Shares

மட்டக்களப்பு நகரப் பகுதியில் பாலியல் ரீதியான தவறான நோக்கத்துடன் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் புஸ்ஸலாவையைச் சேர்ந்த பெண்ணொருவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வவுணதீவு பொலிஸார் திங்கட்கிழமை (24) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மட்டக்களப்பு நகர பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

மேலும், திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் பாலியல் தொழிலை நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மேயரும் அவரது கணவர் உட்பட 09 பேர் மட்டக்களப்பு பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments