1990இல் மூடப்பட்ட பாதை 26 ஆண்டுகளின் பின் பாவனைக்காக திறப்பு

Report Print Vanchi in சமூகம்
534Shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட திக்கோடை கிராமத்திலிருந்து தும்பாலை நோக்கிச் சொல்லும் ஆதிகால பாதையானது நேற்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் உதவியோடு முழுநாள் சிரமதானம் செய்யப்பட்டு பாவனைக்காக மாற்றப்பட்டது.

திக்கோடை தும்பாலை பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் இப்பாதையின் முக்கியத்துவம் பற்றியும் கிராம குறைகள் சம்பந்தமாகவும் மாகாண சபை உறுப்பினருடன் கலந்துரையாடியதனை அடுத்து,

நேற்றைய தினம் 26 வருடங்களாக பற்றைக்காடுகளாக மூடப்பட்டு பாவனையற்று இருந்த பாதை சிரமதானம் மூலம் செப்பனிடப்பட்டிருக்கின்றது.

1990ம் ஆண்டு வன்செயலின் பின்னர் திக்கோடையிலிருந்து தும்பாலைக்கான ஆதிகால பாதையானது பாவனையற்று போயிருந்ததுடன் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் புனரமைப்புச் செய்யப்பட்டமையானது, மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதாகவும் இதன் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் பாதை பாதுக்கப்படும் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

Comments