வீரவங்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் மரணம் - சஷி வீரவங்சவிடம் விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்
1156Shares

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் ஹோக்கந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீரவங்சவின் புதல்வரது நெருங்கிய நண்பனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருவரும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்து வருவதுடன், இறந்த இளைஞன் அடிக்கடி வீட்டுக்கு வந்து தங்கிவந்துள்ளதுடன் நேற்றிரவு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச, இளைஞனை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் இருந்தும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்த தயாராகி வரும் தலங்கம பொலிஸார், சஷி வீரவங்சவிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தையும் இதே விதமாக இறந்து போனதாகவும் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகவும் இளைஞனின் தாய் கூறியுள்ளார்.

இளைஞனின் மரணம் சம்பவித்த நேரத்தில் விமல் வீரவங்ச கொழும்புக்கு வெளியில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்ததுடன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments