ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலின்படி ஒக்டோர் மாதம் 'வன ரோபா' எனும் பெயரில் தேசிய மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று ஆண்டு காலத்துக்குள் நாட்டின் உள்ள காடுகளை 32 வீதம் வரை அதிகரிப்பதற்கான இலக்கை எய்து கொள்ளும் வேலைத்திட்டத்தின் அரச , அரசார்பற்ற மற்றும் தனியார் தரப்பினரின் முனைப்புடனான பங்களிப்புடன் வருடாந்த நிகழ்ச்சி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வன ரோபா “ எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தேசிய மர நடுகை வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மர நடுகையை முறையாக அறிமுகப்படுத்தும் முகமாக ஒக்டோபர் மாதம் “வன ரோபா “ தேசிய மர நடுகை மாதமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதன் கீழ் சகல மாவட்டத்தின் செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் பொருத்தமான இடங்களை இனங்கண்டு மர நடுகை நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்க பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபையினால் மர நடுகை நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் பிரதான வீதி ஓரங்களிலும், மட்டக்களப்பு வெபர் மைதானத்தை அண்டிய பகுதிகளிலும் இந்த மர நடுகை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மர நடுகை நிகழ்வினை முன்னுரிமை படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு நகரில் மர நடுகையின் முக்கியத்துவத்தின் பயனை அறிமுகப்படுத்து பாடலினை அறிமுகப்படுத்தப்பட்டு பாடல் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.