நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞனுக்கும், வீரவன்சவின் மகளுக்கும் இடையிலான காதல் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விமல் வீரவன்சவின் மகளுக்கும் வீரவன்சவுக்கும் நண்பரான லஹிரு ஜனித் திஸாநாயக்கவுக்கும் இடையில் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞருக்கு விமல் வீரவன்சவுக்கு உறவு முறை உள்ளது. அவர் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விமலின் மகள் மற்றும் லஹிருவுக்கு இடையிலான இந்த காதல் விவகாரத்திற்கு விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
24 வயதுடைய லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இந்த இளைஞர் நேற்று பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலங்கம பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த விமலின் மனைவி சஷி வீரவன்ச மற்றும் அவரது மகன் விபுதி விஷ்வஜித வீரவன்சவிடம் நீண்ட வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் வழமைப்போல் தங்கள் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று உறங்கியதாக சஷி வீரவன்ச பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் என்ன நடக்கின்றதென்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும் என உயிரிழந்த இளைஞரின் தாயார் தெரிவித்துள்ளார்.