படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு வடமாகாணசபையில் அஞ்சலி

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
44Shares

பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு வட மாகாண சபையின் 64ஆம் அமர்வில் 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.,

மேலும், மாணவர்களின் படுகொலைக்கு உடனடி விசாரணை வேண்டும். இல்லையேல் அரச இயந்திரத்தை முடக்குவோம் என மாகாணசபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

வட மாகாணசபையின் 64ஆம் அமர்வு இன்று(27) மாகாணசபை பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சகல மாகாணசபை உறுப்பினர்களும் தம் ஆசனங்களில் இருந்து எழுந்து அவை தலைவர் ஆசனத்திற்கு முன்பாக சென்று படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் விடயத்தில் உடனடியாக நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். எனவும் அரச பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பாக மாகாணசபை ஊடாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி விடயம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments