போதைப்பொருள் கடத்திய இந்திய மீனவர்கள் கைது

Report Print Aasim in சமூகம்
63Shares

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் இலங்கை அதிகாரிகளால் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்த முற்பட்டவேளை சிலாவத்துறை, அரிப்பு பிரதேசத்தின் கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இவர்களிடமிருந்து இரண்டு கிலோ எடை உடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments