மூதூரில் சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளை

Report Print Mubarak in சமூகம்
134Shares

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் என்பவரின் வீட்டில் இன்று(27) காலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் என்பவரின் வீட்டு ஜன்னலை கழற்றி வீட்டினுள் புகுந்த திருடர்கள் 31,000 ரூபாய் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.

சட்டத்தரணி அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை, அதிகாலை 3 மணியளவில் சடுதியாக கண் விளித்து பார்த்த போது வீட்டில் போடப்பட்டிருந்த மின் குமிழ்கள் அணைக்கப்பட்டிருந்தன.

இதன் பிறகு அவர் மின் குமிழை போட்ட போது வீட்டின் ஜன்னலொன்று கழற்றப்பட்டும், தனது சட்டைப்பையிலுள்ள பணம் திருடப்பட்ட, கார் திறப்பு மாத்திரம் வெளியில் வீசப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது.

மேலும், சட்டத்தரணியினால் குறித்த சம்பவம் பற்றி மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments